டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை செல்லமாக கடித்த நடிகை பூர்ணாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களில், சிறப்பாக செயல்படும் போட்டியாளர்களை கைக்குலுக்கி, கட்டிப்பிடித்து பாராட்டுவது நடுவர்களின் வழக்கம். ஆனால் நடிகை பூர்ணா ஒரு படி மேலே போய் போட்டியாளரின் கன்னத்தை கடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தமிழில் அறிமுகமாவதற்கு முன் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் கந்தக்கோட்டை, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
பூர்ணா தற்போது வெளியாகியுள்ள தலைவி படத்திலும் நடித்துள்ளார். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறாமல், நல்ல கதாப்பாத்திரங்களிலும் பூர்ணா நடித்து வருகிறார். தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள பூர்ணா, டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கு தொலைக்காட்சியில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சியில் பூர்ணா நடுவராக இருந்து வருகிறார். அதில் போட்டியாளர் ஒருவர் சிறப்பாக டான்ஸ் ஆட, அவரை பாராட்டும் விதமாக நடிகை பூர்ணா, கன்னத்தில் முத்தம் கொடுத்தது மட்டுமின்றி, போட்டியாளரின் கன்னத்தை கடிக்கவும் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகை பூர்ணாவை விமர்சித்து வருகின்றனர்.