Rasi Palan 15th June 2021: இன்றைய ராசிபலன்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 15th June 2021: இன்றைய ராசி பலன், ஜூன் 15ம் தேதி 2021


ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

உங்கள் இதயம் உங்களுக்கு ஒரு விஷயத்தையும் உங்கள் அறிவு இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். கூட்டத்தில் உங்களை இழந்துவிட்டதாக நீங்கள் உணரலாம். ஆனால், முன்னோக்கி முன்னேறி, முன்னிலை வகிக்க உங்களுக்கு மிகுந்த நிர்ப்பந்தம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் ஒரு எடுத்தால் உங்கள் தலைமை அப்படியே இருக்கும். மற்றவர்கள் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

இப்போது நீங்கள் அடிப்படை விஷயங்களில் இறங்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக் கட்டத்தில் பிரகாசமான மற்றும் ஈர்ப்பான பகுதிகளில் உள்ள கிரகங்கள் உங்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காண்பிக்கிறது. அதனால், வெளிநாட்டிலிருந்தோ அல்லது தொலைதூரத்திலிருந்தோ வரும் செய்திகள் பயணம் அல்லது குடும்பத் திட்டங்களை மாற்றக்கூடும்; ஒரு திட்டம் இனி நீண்ட நாட்களுக்கு வேலை செய்யாது என்பதை காண்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

வேலையில் உள்ள சூழ்நிலைகளை புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால், அது நிதி விஷயமாகவும் இருக்கலாம் மேலும் அது மிகவும் அழுத்தமாக இருக்கும். கொள்முதல் அல்லது முதலீடு பற்றிய துரதிர்ஷ்டவசமான செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், தோல்வியின் பிடியில் இருந்து ஒரு பெரிய வெற்றியைப் பறிக்க முடியும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

உங்கள் மனதை மூடிமறைத்துக் கொண்டிருக்கிற எந்த குழப்பமும் சந்தேகமும் இப்போது முற்றிலும் அகற்றப்பட வேண்டும். அதிலிருந்து நீங்கள் விரைவில் முற்றிலும் விடுபட வேண்டும். இருப்பினும், தத்துவவாதிகள் கூறுகிற ஒரு திகிலூட்டும் விஷயம், முக்கியமாக திடீரென்று உங்களுக்கு முன்னால் ஒரு தேர்வுக்கான உலகம் திறக்கிறது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

விரைவான நடவடிக்கை மிக முக்கியமானது. எனவே, நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களால் முடிந்தவரை விரைவாக கூட்டாளிகளை அழைத்து வருவதற்கு நீங்கள் சிறப்பாக செய்யலாம். சமீபத்தில் செய்து முடிக்கப்பட்ட ஏற்பாடு மெண்மையானதாகவும் பல கடினமான முடிவுகளையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இழப்புகளுடன் உதவக்கூடிய பிற நபர்களும் இருக்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் மிகப்பெரிய கிரகத்தின் செல்வாக்கு உள்ளது. அது ஒற்றை கலாச்சார மகிழ்ச்சியுடன் இணைக்கப்படுகிறது. இளைய உறவினர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தேவைப்படலாம். எனவே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நீங்கள் விரும்பும் நபர்கள் உங்கள் ஆலோசனையை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இது உங்களுக்குள் இதமாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

ஒரு குடும்பத்தில் உள்ள சிரமங்கள் அல்லது காதல் உறவு எச்சரிக்கையின்றி தோன்றியிருக்கலாம். மற்றவர்களில் பெருகிய ஈகோக்களைத் தொந்தரவு செய்ய வாழ்க்கையின் அத்தியாவசிய பணிகளைச் சமாளிப்பதில் உங்களில் பலர் மிகவும் பிஸியாக இருப்பார்கள். அனேகமாக, யாரையாவது தங்கள் சொந்த விவகாரங்களுக்குப் பொறுப்பேற்க விடுவதற்கு நிற்க வேண்டிய நேரம் இது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

சமீபத்திய வாதம் அல்லது கருத்து வேறுபாடு நிகழ்வுகளால் முறியடிக்கப்படும். வீடு மற்றும் குடும்ப அழுத்தங்கள் உங்கள் நேரத்தை சரியாக ஆக்கிரமிக்கக்கூடும். எனவே, நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சமூக சாத்தியங்களை நிராகரிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அவற்றை ரத்து செய்வது அவசியம் என்றால், நீங்கள் தவறான எண்ணத்தை கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

சிக்கல்களைச் சமாளிக்க உங்களுக்கு உதவும் எந்த எண்ணங்களையும் திட்டங்களையும் நீங்கள் தொடரலாம். நிதி அல்லது பொருளாதார பிரச்னைகள் மூலம் உங்கள் வழியை சில நாட்களுக்கு முன்பே தெளிவாகக் காணலாம். எதிர்காலத்தைப் பார்த்தவுடன், தீவிரமான மற்றும் தொலைநோக்கு தீர்வுகள் மட்டுமே செயல்படும் என்பதை நீங்கள் உணரலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

நடக்கும் நிகழ்வுகளின் அழுத்தத்தின் கீழ் நீங்கள் திணறுகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் நட்சத்திரங்களுடன் நன்றாகப் பொருந்துகிறீர்கள் என்று அர்த்தம். தற்போதைய சூரிய-சந்திர கிரக அமைப்பு உங்களை சுத்தப்படுத்தவும், கடந்த காலத்தை உங்களுக்கு பின்னால் வைக்கவும், நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய நபர்களுடனான உறவை நேராக்கவும் சவால் விடுகிறது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

உங்கள் நுண்ணுணர்வுத் திறன்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்படலாம். ஆனால், எது நல்லது என்று தெரிந்த எவரும் உங்கள் நல்ல நுண்ணறிவைக் கேட்பார்கள். எந்தவொரு விஷயத்திலும் உங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத, கிட்டத்தட்ட ஆதாரமற்ற, சந்தேகங்களால் இழுபட வேண்டாம்!

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

மற்றவர்களின் இரக்கமற்ற அணுகுமுறையால் நீங்கள் மிகவும் காயப்படுத்தப்படலாம் அல்லது வருத்தப்படலாம். இருப்பினும், நீங்கள் பெறும் அளவுக்கு நல்லதை கொடுக்க முடியும். மேலும் ஒன்று அல்லது இரண்டு சமூக இடையூறுகளுக்கு நீங்கள் கூட காரணமாக இருக்கலாம். நீங்கள் குழப்பமடையக்கூடாது என்றால் நீங்கள் விரைவில் மற்றவர்களின் மனதை மாற்றலாம்.

Comments
Write Your Own Comments
Submit

ஆன்மிகம்

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க