முதல்வர் வீட்டருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு… மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் மா சுப்பிரமணியன்...

தகவல்கள் / தமிழகம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டருகே வந்த ஒருவர், திடீரென கையில் வைத்திருந்த  மண்ணெண்ணெய் மேலே ஊற்றித்  தீக்குளிப்பில் ஈடுபட்டார்.


இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், தீக்குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர். தீக்காயம் அடைந்த நபரை, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை நடத்திய விசாரணையில், தீக்குளித்த நபர் தென்காசி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் , அவரை சிலர் வாபஸ் வாங்கச் சொல்லி  மிரட்டுவதாகவும் கூற முதல்வர் இல்லம் முன்பு தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில், இந்தத் தகவலை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உடனடியாக  மருத்துவமனைக்கு நேரில் சென்று, தீக்குளித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.


Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க