சோகத்தை மறந்து கலாய்த்த நடிகை... விஜய் டிவி முக்கிய சீரியல் திடீர் நிறுத்தம்…

தகவல்கள் / சினிமா

தேன்மொழி பிஏ சீரியல் முடிவடைய உள்ளதை ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார் சீரியலின் நடிகை ஜாக்லின்.

விஜய் டிவியில் கடந்த 2019 முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தேன்மொழி பிஏ, கிராமத்து இளம்பெண் ஊராட்சிமன்றத் தலைவராவது, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த ஊரின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை திருமணம் செய்துக் கொள்வது, மாமியார் வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் அவர்கள் மனதில் இடம்பிடிக்கப் போராடுவது என வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டது இந்த சீரியல். இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜேவான ஜாக்லின் ஹீரோயினாகவும், சித்தார்த் ஹீரோவாகவும் நடித்து வந்தனர்.

ஜாக்லின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜாலியாக, அவ்வப்போது சில போட்டியாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார். ஜாக்லின் இதற்கு முன் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தேன்மொழி சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதால் தேன்மொழி சீரியல் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஜாக்லின், போன வருடம் கோடு போட்டார்கள், இந்த வருடம் ரோடு போட்டு அனுப்பி விட்டார்கள். அதனால் பிஏ வரைக்கும் படித்தது போதும் என நானும் மனசை தேற்றிக் கொண்டேன், என ஜாலியாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த பிக் பாஸ் சீசனின் போது ஜனவரி 4 முதல் இரண்டு வாரங்களுக்கு தேன்மொழி சீரியலின் ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டது. இந்த பிக் பாஸ் சீசனுக்கு, சீரியலுக்கு எண்டு கார்டே போட்டுவிட்டார்கள்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க