டெலிகிராம் ஒரு புதிய புதுப்பிப்பை அறிமுகப்படுத்துகிறது. இது பயன்பாட்டில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. லைவ் ஸ்ட்ரீம்கள் மற்றும் வீடியோ சாட்களை பதிவு செய்ய இனி இந்த பயன்பாடு பயனர்களை அனுமதிக்கும். உடனடி செய்தி சேவை எட்டு புதிய சாட் தீம்களையும் பெறுகிறது. ஒவ்வொரு தீமும் பகல் மற்றும் இரவு பதிப்பில் வழங்கப்படும்.
மேலும் இந்த நிறுவனம் குழுக்களில் விரிவான வாசிப்பு ரெசிப்ட்டுகளையும் அறிமுகப்படுத்துகிறது. புதிய அப்டேட்டின் ஒரு பகுதியாக முழு திரை எஃபக்ட் மற்றும் புதிய இன்டராக்டிவ் இமோஜிகளையும் பயனர்கள் பெறுவார்கள்.
பயனர்கள் தங்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்க, குறிப்பிட்ட தனியார் சாட்களுக்கு டெலிகிராமின் புதிய சாட் தீம்களைப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு புதிய தீம்களும் gradient message bubbles, அனிமேஷன் செய்யப்பட்ட பின்னணிகள் மற்றும் தனிப்பட்ட பின்னணி வடிவங்களைக் கொண்டிருக்கும். இது பயனர்கள் தங்கள் சாட்களை ஒழுங்கமைக்க அனுமதிக்கும்.
உங்கள் சாதனத்தில் தீம்களை இயக்க விரும்பினால், பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் புதுப்பித்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். சாட் சாளரத்தில் உள்ள சாட் தலைப்புப் பெட்டியை க்ளிக் செய்து, பிறகு மூன்று-புள்ளி ஐகானைக் கிளிக் செய்து, தீம்களை இயக்க வண்ணங்களை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும், இந்த பயன்பாடு முழு திரை எஃப்பக்ட்டுகளுடன் புதிய அனிமேஷன் எமோஜிகளைப் பெறுகிறது. பயனர் மற்றும் சாட் பார்ட்னரின் அரட்டை சாளரம் திறந்திருந்தால் அனிமேஷன்கள் மற்றும் அதிர்வுகள் ஸ்மார்ட்போன்களில் ஒரே நேரத்தில் இயங்கும்.
குழுவில் உள்ள மற்ற பயனர்கள் தங்கள் செய்தியைப் பெற்றிருக்கிறார்களா/ படிக்கிறார்களா என்பதைப் பயனர்கள் இப்போது சரிபார்க்க முடியும். வாசிப்பு ரெசிப்ட் நிலையைக் குறிக்கக் குழுச் செய்திகள் இரட்டைச் சரிபார்ப்பு ஐகானால் (✓✓) குறிக்கப்படும்.
முந்தைய புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, டெலிகிராம் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இது, லைவ்ஸ்ட்ரீமைத் தொடங்கும்போது பங்கேற்பாளர்களின் முடிவில்லாத எண்ணிக்கையிலான விருந்தினர்களை மகிழ்விக்க அனுமதித்தது. இப்போது, சமீபத்திய புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, செயலி நேரடி ஒளிபரப்புகள் மற்றும் வீடியோ சாட்களை பதிவு செய்ய அட்மின்களை அனுமதிக்கும்.