பிக் பாஸ் என்றாலே பரபரப்பு. அது, நிகழ்ச்சியில் மட்டுமல்ல, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி நிறைவடைந்த பிறகும் சரி, ஓயாமல் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் என சமூக வலைத்தளங்கள் படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும். அந்த வரிசையில், எப்போதுதான் இந்த 5-ம் சீசனை தொடங்குவார்கள்? ஏன் இந்த தாமதம் என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, யாரெல்லாம் இம்முறை இந்த நிகழ்ச்சிக்கு சென்றால் நன்றாக இருக்கும், யாரெல்லாம் செல்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதைப் பற்றிய டிஸ்கஷன் தீவிரமாக சென்றுகொண்டிருக்கின்றது.

எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாகத் தொடங்கியது. அதேபோல இந்த முறையும் தாமதமாகத் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். அக்டோபர் 3-ம் தேதி, நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகிய நிலையில், யாரெல்லாம் இம்முறை கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Pradaini Surva

அந்த எதிர்பார்ப்புப் பட்டியலில், நடிகை ஷகிலாவின் மகள் மிளா, நாடோடிகள் 2 படத்தில் நடித்த நமீதா மாரிமுத்து, மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், சின்னதிரை நடிகை பாவனி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து, சூசன், பிரதாயினி சுர்வா, எம்எஸ் பாஸ்கர், ஜான் விஜய் உள்ளிட்டவர்களின் பெயர்கள் உள்ளன. மேலும், இந்த எதிர்பார்ப்பு பட்டியலில் தற்போது விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
VJ Pappu

என்றாலும், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து, சூசன், பிரதாயினி சுர்வா, பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். என்னதான் விவாதங்கள் போய்க்கொண்டிருந்தாலும், இப்படி இல்லை என்று உறுதி செய்தவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பதற்கும், உறுதியாக இவர்கள் செல்வார்கள் என்று நினைத்தவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவரைக்கும் வெயிட் பண்ணிதான் ஆகணும்.
Priyanka Deshpande

விஜே பிரியங்கா போட்டியாளராக வரப்போகிறார் என்றதும், பெரும்பாலான மக்கள் அவருக்கு சப்போர்ட் செய்து பேசினாலும், ‘அர்ச்சனா போலப் பேரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்’ என்கிற கமென்ட்டை அதிகம் காண முடிந்தது. ஆனால் தற்போது அவர் வரவில்லை எனக் கூறியதும், ‘அவரே பயந்து ஒதுங்கிவிட்டார் போல’ என்பது பலர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.