பாக்யாவுக்கு நிஜத்தில் ஒரே மகள்… அம்மாவும் மகளும் சேர்ந்துட்டா அழகுதான்!

காணொளிகள் / மற்றவை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு தான். அந்த வகையில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், இந்த சீரியல் அதன் துவக்க காலத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தது என்றே கூறலாம். ஆனால் தற்போதைய வாரங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட முன்னணி சீரியல்களுள் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள், வேறு மொழியில் எடுக்கப்பட்ட சீரியல்களை ‘டப்’ செய்தும், ரீமேக் செய்தும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலும் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இது தமிழ் உட்பட கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


அப்படிப்பட்ட இந்த பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த குடும்ப தலைவி தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார் என்பதே ஆகும். இதில் குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் நடிகை கே எஸ் சுசித்ரா நடிக்கிறார்.

நடிகை சுசித்ரா இந்த சீரியலில் கட்டும் சேலைகள் முதல் அவரின் வசனங்கள் வரை, சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகி உள்ளன. குடும்ப தலைவியாக வரும் அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ஆனால் உண்மையில் இவருக்கு ஒரே ஒரு மகள் தான்.

தற்போது, நடிகை சுசித்ரா தனது உண்மையான மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ரசிகர்கள் சிலர் இது தான் நடிகை சுசித்ராவின் உண்மையான மகளா? போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க