சின்னத்திரை சீரியல் நடிகை மௌனிகா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தொடர்ந்து மகராசி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மௌனிகாவிற்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியின் போது நடிகை மௌனிகா, அவரது வருங்கால கணவர் மற்றும் சீரியல் பிரபலங்கள் பலர் இணைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.