Sun TV Serial: வீட்டைவிட்டு வெளியேறிய சுந்தரி; களத்தில் இறங்கிய போலீஸ்

காணொளிகள் / சினிமா

தொடக்கத்தில் இருந்தே கணவர் கார்த்தியின் அன்பு கிடைக்காமல் ஏங்கும் சுந்தரி, அவர் நடந்துகொண்ட விதம், பேசிய பேச்சு என அனைத்தையும் நினைத்து கண்ணீர் விடுகிறாள். மேலும் போன் எடுக்காத, என்ன தொடாத, உன்ன மாதிரி பெண்களை எனக்கு சுத்தமா பிடிக்காது என்று கணவர் சொன்ன வார்த்தைகளை எண்ணி மனம் வருந்தும் சுந்தரி, அவள் மட்டும் இருப்பது போல வீடு பார்க்க சொன்னது பற்றி நினைத்து மனமுறுகி அழுகிறாள்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் எழும் மாமா எழுந்து வீட்டில் யாரும் இல்லை என்பதால் கார்த்திக்கிற்கு போன் செய்கிறார். அப்போது கார்த்திக் பாட்டி உடன் ஹாஸ்பிடல் வந்ததாகவும், சுந்தரி வீட்டில் இருப்பதாகவும் கூறுகிறான். அதன்பின் வீட்டில் சுந்தரியை தேடும் மாமாவுக்கு சுந்தரி எழுதிவைத்த ஒரு கடிதம் கிடைக்கிறது. இந்த கடிதத்தை படித்து பார்த்த மாமா அதிர்ச்சியில் உறைகிறார்.


இதற்கிடையே இவர் படிக்கவைத்து போலீஸ் ஆக்கிய ராதா வீட்டுக்கு வருகிறார். வந்தவுடன் இதுவரை ஒருமுறை கூட வந்து என்னை பார்கவரவில்லை என பாசத்துடன் கோபப்படும் ராதா, சுந்தரி எங்கே என சொல்லி அவரை கூப்பிடுகிறாள். ஆனால் சுந்தரி வராததால், சந்தேகமடையும் ராதா, என்ன நடந்தது என அவரிடம் கேட்கிறார். ஆனால் மாமா விஷயத்தை சொல்ல தயங்கும்போது, உங்கள் பணத்தில் படித்து வளர்ந்தவள் நான், உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை நினைத்து சொல்லுங்கள்’ என சொல்கிறார்.

அதன் பின் மாமா சுந்தரி எழுதிய கடிதத்தை லெட்டரை அவரிடம் கொடுக்கிறார். அந்த கடித்த்தை படித்து பார்க்கும் ராதா,  சுந்தரியை எப்போது கடைசியாக பார்த்தீர்கள் என விசாரிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க